ஆட்டோ வழங்கும் விழா
தேனி: தேனி சங்கமம் ரோட்டரி சங்கம் சார்பில் பழனிசெட்டிபட்டியை சேர்ந்த விஜயலட்சுமிக்கு சிங்கப் பெண்ணே திட்டத்தின் கீழ் ஆட்டோவை டி.எஸ்.பி., பார்த்திபன் வழங்கினார். தலைவர் மதிவாணன், செயலாளர் சண்முகபாண்டியன், பொருளாளர் சுருளிநாதன், முன்னாள் தலைவர் தங்கப்பாண்டியன், மாவட்ட நிர்வாகிகள் அழகர்சாமி, குமாரப்பன், ராஜேந்திரன் உள்ளிட்ட ரோட்டரி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.