உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / அரசு கலை கல்லுாரியில் ரத்ததான முகாம்

அரசு கலை கல்லுாரியில் ரத்ததான முகாம்

தேனி: வீரபாண்டி அரசு கலை கல்லுாரியில் வீரபாண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம்,கல்லுாரி நிர்வாகமும் இணைந்து ரத்ததான முகாமை நடத்தினர். கல்லுாரி முதல்வர் உமாதேவி தலைமை வகித்தார். வட்டார மருத்துவ அலுவலர் கலைச்செல்வி முன்னிலை வகித்தார். மாணவர்களுக்கு ரத்ததானம் செய்வதன் நன்மைகள், ரத்த தானம் சேமிக்கும் முறை, பயன்பாடு உள்ளிட்டவை பற்றி விளக்கப்பட்டது. மாணவர்கள் 70 பேர் ரத்த தானம் வழங்கினர். மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை ரத்த வங்கி குழுவினர், டாக்டர் பிரியா மாவட்ட சுகாதாரக் கல்வியாளர் சுப்ரமணியன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் நாகராஜ், நம்பிக்கை மைய ஆலோசகர் முத்துலட்சுமி முகாமை மேற்பார்வையிட்டனர். துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் முகாமை ஒருங்கிணைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை