உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பூத்துத்குலுங்கும் மயில் கொன்றை பூக்கள்

பூத்துத்குலுங்கும் மயில் கொன்றை பூக்கள்

தேவாரம்: தேவாரம் பகுதியில் மயில் கொன்றை பூக்களை பல இடங்களில் பூத்துக் குலுங்குவதால் அதனை மக்கள் ரசித்து அலைபேசியில் போட்டோ எடுத்து மகிழ்கின்றனர்.மஞ்சள் நிறத்தில் பூக்கும் இயல் வாகை மரங்களும், சிவப்பு நிறத்தில் பூக்கும் மயில் கொன்றை வகைகள் உள்ளன. மயில் கொன்றை பூக்களை ஏப்., மே, ஜூன் சீசன் காலம் ஆகும். இந்த மரங்களில் மற்ற மாதங்களில் பூக்கள் மட்டுமின்றி காய்களும் காய் காய்க்காத நிலையில் இருக்கும். வெயில் காலம் துவங்கி விட்டாலே மரத்தின் இலைகளை காட்டிலும் பூக்கள் அதிகம் பூத்து காணப்படும். இயற்கை ஆர்வலர்கள் இவற்றை அலங்கார கொன்றை என கூறுவது வழக்கம். நீண்ட தூரத்தில் இருந்து பார்த்தாலே சுற்றுலா பயணிகளின் கண்களை கவரும் வகையில் சிவப்பு நிறத்தில் பூத்து குலுங்கும். பெரும்பாலும் மெயின் ரோடு, பள்ளிகளில் வளர்ந்து காணப்படுவதால் வாகனங்களை செல்லும் மக்களும் கண்டு ரசிப்பதோடு, அலைபேசியில் போட்டோ எடுத்து மகிழ்ந்து செல்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ