உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / வைகை அணை பூங்காவில் பூத்து குலுங்கும் செடிகள்

வைகை அணை பூங்காவில் பூத்து குலுங்கும் செடிகள்

ஆண்டிபட்டி : வைகை அணை ஜீரோ பூங்காவில் நடப்பட்ட புதிய செடிகளில் வண்ண மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன. சமீபத்தில் பெய்த மழையால் வைகை அணையில் உள்ள மரம் செடி கொடிகளில் பசுமை படர்ந்துள்ளது. வைகை அணையின் வலது, இடது கரைகளில் 15க்கும் மேற்பட்ட பூங்காக்கள் உள்ளன. நீர்வளத்துறை அலுவலகம் அருகே உள்ள ஜீரோ பூங்கா சமீபத்தில் சீரமைக்கப்பட்டு புதிய பூச்செடிகள் நடப்பட்டன. சமீபத்தில் பெய்த மழையால் செடிகள் செழித்து வளர்ந்துள்ளன. செடிகளில் பூத்துள்ள வண்ண மலர்கள் சுற்றுலா வரும் பயணிகளுக்கு மகிழ்ச்சி ஏற்படுத்துவதாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி