உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ஆண்டிபட்டி தாலுகாவில் உங்களுடன் உங்கள் ஊரில் முகாம்

ஆண்டிபட்டி தாலுகாவில் உங்களுடன் உங்கள் ஊரில் முகாம்

தேனி :L ஆண்டிபட்டி தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் நாளை உங்களுடன் உங்கள் ஊரில் முகாம் நடக்கிறது.தமிழகத்தில் மாவட்டத்திற்கு ஒரு தாலுகாவில் மூன்றாவது புதன் கிழமை 'உங்களுடன் உங்கள் ஊரில் முகாம்' கலெக்டர்கள் தலைமையில் நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் முகாம் நடக்கும் நாளில் அரசு அலுவலகங்கள், பள்ளிகள், மருத்துவமனைகளில் ஆய்வுகள் நடத்தப்படும். மாவட்ட அளவிலான அலுவலர்கள் தாலுகா பகுதிகளில் சோதனையில் ஈடுபடுவர். மாவட்டத்தில் ஆண்டிபட்டி தாலுகா பகுதியில் கலெக்டர் ஷஜீவனா தலைமையில் அதிகாரிகள் ஆய்வுகள் மேற்கொள்ள உள்ளனர். மேலும், கொண்டம நாயக்கன்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாலை 4:00 மணிக்கு மேல் பொது மக்கள், கலெக்டரிடம் மனுக்கள் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி