மேலும் செய்திகள்
முல்லைப் பெரியாற்றில் குளித்த கல்லுாரி மாணவர் பலி
4 hour(s) ago
பள்ளி கலை விழா துவக்கம்
4 hour(s) ago
குரங்குகளுக்கு உணவு வழங்குவதை தடுக்க வலியுறுத்தல்
4 hour(s) ago
தாயுமானவர் திட்டத்தில் கூடுதலாக 8558 பேர் சேர்ப்பு
4 hour(s) ago
கம்பம், : கவுதிமாலா நாட்டில் கடும் வறட்சி நிலவுவதால் ஏலக்காய் சாகுபடியில் சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் ஏலக்காய் விலை உயர வாய்ப்புக்கள் அதிகரித்துள்ளதாக மார்க்கெட்டிங் ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.சர்வதேச அளவில் இந்தியா, கவுதிமாலா நாடுகளில் மட்டும் ஏலக்காய் சாகுபடியாகிறது. சர்வதேச சந்தையில் இந்திய ஏலக்காய்க்கு போட்டியாக கவுதிமாலா நாட்டு ஏலக்காய் உள்ளது. தரத்தில் சிறந்ததாக இந்திய ஏலக்காய் இருந்தாலும், விலையில் குறைத்து வழங்கி கவுதிமாலா நாடு இந்திய ஏலக்காய் ஏற்றுமதிக்கு சவாலாக உள்ளது.இந்த சீசனில் கடந்த 3 மாதங்களுக்கு மேல் மழை இல்லாமல் கடும் வெப்பம் நிலவுவதால், இந்தியா ஏலக்காய் உற்பத்தி பாதிக்கும் அபாயம் உள்ளது. ஆகஸ்ட் மாதம் தான் சீசன் ஆரம்பமாகும். இன்னமும் உள்ள 3 மாதங்களில் நல்ல மழை கிடைத்தால் ஓரளவிற்கு உற்பத்தி பாதிப்பிலிருந்து தப்பிக்கலாம். ஆனால் இப்போதைக்கு ஏலத்தோட்டங்களில் உள்ள கிணறுகள் வற்றி, செடிகள் காய துவங்கி விட்டன. இதனால் கடந்த ஒரு வாரமாக விலை திடீரென உயர்த்து ரூ.2 ஆயிரத்தை தொட்டுள்ளது. இதற்கிடையே நமது போட்டி நாடான கவுதி மாலாவில் கடும் வறட்சி நிலவுகிறது. அங்கு கடந்தாண்டு 54 ஆயிரம் டன் உற்பத்தியானது. ஆனால் இந்தாண்டு 30 ஆயிரம் டன் தான் வரும் என்று கணித்துள்ளனர்.இந்தியாவிலும், கவுதி மாலாவிலும் ஒரே சமயத்தில் உற்பத்தி பாதித்தால் ஏலக்காய் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று மார்க்கெட்டிங் ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
4 hour(s) ago
4 hour(s) ago
4 hour(s) ago
4 hour(s) ago