உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தேவதானப்பட்டியில் குடும்ப தகராறில் நால்வர் மீது வழக்கு

தேவதானப்பட்டியில் குடும்ப தகராறில் நால்வர் மீது வழக்கு

தேவதானப்பட்டி : ஓட்டுச்சாவடி அருகே ஓட்டுப்பதிவு செய்ய நின்றிருந்தவரை கத்தியால் குத்திய மைத்துனர் அனித்குமார், தாக்கிய மூவர் உட்பட நால்வர் மீது தேவதானபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.தேவதானப்பட்டி தெற்கு தெரு ஜீவராஜ் 35. இவருக்கும் எருமலை நாயக்கன்பட்டி மூர்த்தி மகள் அம்சலட்சுமிக்கும் 5 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. சிவசூர்யா என்ற 4 வயது மகன் உள்ளார். ஜீவராஜ் தனக்கு சொந்தமான வீட்டினை 8 மாதங்களுக்கு முன் ரூ.1.50 லட்சத்திற்கு விற்பனை செய்தார். அந்த பணத்தை அம்சலட்சுமியிடம் கொடுத்து வைத்திருந்தார். அம்சலட்சுமி வேறொருவருடன் கள்ளத்தொடர்பு வைத்துக் கொண்டு பணத்தை எடுத்துக் கொண்டு 6 மாதங்களுக்கு முன் வெளியூர் சென்றார். ஏப்.18 ல் ஜீவராஜ் எருமலைநாயக்கன்பட்டியில் மாமியார் வீட்டுக்கு சென்று பணம் கேட்டு வாக்குவாதம் செய்தார். ஏப்.19 ல் தேவதானப்பட்டி ஓட்டுச்சாவடிக்கு ஓட்டுப்பதிவு செய்ய அங்கு நின்றிருந்த ஜீவராஜை, அம்சலட்சுமியின் சகோதரர் (மைத்துனர்) அனித்குமார் பணம் கேட்டு ஏன் வீட்டிற்கு வந்தாய் என ஜீவராஜை கத்தியால் குத்தினார். அவரது நண்பர்கள் அறிவு, பூமி, காமராஜ் ஆகியோர் ஜீவராஜை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.பெரியகுளம் மாவட்ட அரசு மருத்துவமனையில் ஜீவராஜ் அனுமதிக்கப்பட்டார். தேவதானப்பட்டி போலீசார் காயம்பட்டவரின் மைத்துனர் அனித்குமார் உட்பட நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர். --


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை