உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கார் கண்ணாடி உடைப்பு மூவர் மீது வழக்கு

கார் கண்ணாடி உடைப்பு மூவர் மீது வழக்கு

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி சீதாராம்தாஸ் நகரை சேர்ந்தவர் அர்ஜூனன் மகன் நவீன் 27, அர்ஜுனனுக்கும் ஆண்டிப்பட்டியை சேர்ந்த சிவகுமார் என்பவருக்கும் ஏற்பட்ட பிரச்சனையில் சிவக்குமார் மீது போலீசார் பி.சி.ஆர்., வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கை வாபஸ் பெற சொல்லி சிவக்குமார் நண்பர்கள் வலியுறுத்தி வந்தனர். வழக்கை வாபஸ் பெறவில்லை. இந்த முன் விரோதத்தால் நவீனின் கார் கண்ணாடியை உடைத்து கொலை மிரட்டல் விடுத்தனர்.நவீன் புகாரில் சீதாராம் தாஸ் நகர் பகுதியைச் சேர்ந்த ஜாகிர் உசேன் 55, ரிஷ்வானா 50, ஜாகிர் உசேனின் மருமகன் ஆகியோர் மீது ஆண்டிபட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ