உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மாவட்டத்தில் சர்வதேச யோகா தின விழா கொண்டாட்டம்

மாவட்டத்தில் சர்வதேச யோகா தின விழா கொண்டாட்டம்

பள்ளி, கல்லுாரிகளில் மாணவர்கள் ஆர்வம் தேனி: தேனி மாவட்டத்தில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு நடந்த பள்ளி, கல்லுாரிகள், நிறுவனங்களில் ஏராளமானோர் பங்கேற்று யோகா பயிற்சி செய்தனர்.தேனி கம்மவார் சங்கம் கலை அறிவியல் கல்லுாரி உடற்கல்வித்துறை, என்.எஸ்.எஸ்., திட்டம் சார்பில், தேனி கம்மவார் சங்கத் தலைவர் நம்பெருமாள்சாமி, கல்லுாரி செயலாளர் தாமோதரன் முன்னிலையில் உலக யோகா தினம் நடந்தது. கல்லுாரி பொருளாளர் வாசுதேவன், முதல்வர் சீனிவாசன் பேசினர். உடற்கல்வி இயக்குனர் சிவக்குமார் வரவேற்றார். தேனி அரசு மருத்துவக்கல்லுாரி மயக்கவியல் துறைத் தலைவரும், மனவளக்கலை மன்ற தலைவருமான டாக்டர் கண்ணன் போஜராஜ் பங்கேற்று, யோகா மனிதனுக்குள் உள்ள உடல், உயிர், மனம் ஆகியவற்றை எவ்வாறு இணைக்கிறது என்பதை விளக்கினார். என்.எஸ்.எஸ்., திட்ட ஒருங்கிணைப்பாளர் முருகன் நன்றி தெரிவித்தார்.தேனி அல்லிநகரம் பாக்யா மெட்ரிக் பள்ளியில் தேனி எம்.சி.கே.எஸ்., பிராணி ஹூலிங் சென்டர் ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீமதி, சூப்பர் பிரைன் யோகா' பயிற்சி மூலம் ஞாபக சக்தி அதிகரப்பது குறித்து விளக்கினார். பள்ளி முதல்வர் பரந்தாமன் முன்னிலை வகித்தார். மாணவர்கள் ஆசனங்களை செய்து காண்பித்தனர். ஆசிரியர்கள் வினோத்குமார், கார்த்திகேயன், ஆசிரியைகள் சசிகலா, ஷாலினி, ரெம்சி, சித்ரா, ராஜீ, கவிதா, வாணிஸ்ரீ பங்கேற்றனர்.நாடார் சரஸ்வதி கலை அறிவியல் கல்லுாரியின் என்.எஸ்.எஸ்., திட்டத்தின் சார்பில் யோகா பயிற்சி நடந்தது. தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறையின் தலைவர் ராஜமோகன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் கணேஷ், பொதுச் செயலாளர் ஆனந்தவேல், பொருளாளர் பழனியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை முதல்வர் கோமதி வரவேற்றார். கல்லுாரி செயலாளர் காசிபிரபு, இணைச் செயலாளர்கள் செண்பகராஜன், அருண், முதல்வர் சித்ரா, துணை முதல்வர்கள் சுசிலாசங்கர், சரண்யா, உமாகாந்தி, கிருஷ்ணவேணி பேசினர். தேனி அறிவுத் திருக்கோவில் செயலாளர் ராஜேந்திரன், ரேணுகாதேவி, ஜெயலட்சுமி, சாந்தி, நிர்மலா, ராஜா, மயில்வள்ளி ஆகியோர் மாணவிகளுக்கு யோகா பயிற்சி அளித்தனர். ஏற்பாடுகளை துணை முதல்வர் கோமதி, திட்ட அலுவலர்கள் அமலா, பொண்மணி, நிவேதா, தாரணிதேவி செய்திருந்தனர்.

70 பள்ளிகளில் யோகா தின விழா

தேனி நாடார் சரஸ்வதி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் முதன்மை கல்வி அலுவலர் இந்திராணி தலைமை வகித்தார். பள்ளி செயலாளர் ராதாகிருஷ்ணன், நேரு யுவகேந்திரா மாவட்டத் திட்ட ஒருங்கிணைப்பாளர் நேருராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, வெங்கடாசலபுரம் வி.வி., மேல்நிலைப் பள்ளிகளின் அமைப்புகளை சார்ந்த 500 மாணவிகள் பங்கேற்றனர். மாணவர்களுக்கு தேனி அறிவுத் திருக்கோயில் சார்பில் யோகா பயிற்சி வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை பொறுப்பு தலைமை ஆசிரியை வளர்மதி, வெங்கடாசலபுரம் என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர் சரவணன் செய்திருந்தனர். மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் நேருராஜன் கூறுகையில், உலக யோகா தினத்தை முன்னிட்டு 70 என்.எஸ்.எஸ்., பள்ளிகளை சேர்ந்த 3000 மாணவ, மாணவிகள் தத்து கிராமங்களில் ஊராட்சித் தலைவர், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் யோகா விழிப்புணர்வு நிகழ்வுகளில் பங்கேற்றனர் என தெரிவித்தார்.12 மணி நேர யோகா, சிலம்ப பயிற்சிகோடாங்கிபட்டி மனித நேய காப்பகத்தில் நிர்வாகி பால்பாண்டி தலைமை வகித்தார். தமிழ் ஆர்வலர் இளங்குமரன் துவக்கி வைத்தார். நிர்வாகிகள், காப்பக நன்கொடையாளர்கள் முன்னிலை வகித்தனர். ஆல் இண்டியா புக் ஆப் ரிக்கார்ட்ஸ் நிறுவன மதிப்பீட்டாளர் வெங்கடேசனின் நேரடி ஆய்வில் நேற்று காலை 6:05 முதல் மாலை 6:05 வரையும் மாணவர்கள் யோகாசனம் செய்தனர். சிலம்பம் 2 மணி நேரம் நடந்தன. ஆல் இண்டியா புக் ஆப் ரிக்கார்ட்ஸ நிறுவனத்தின் சார்பல் யோகா, சிலம்ப பயிற்சிகள் வீடியோப்பதிவு செய்யப்பட்டன.கம்பம்: நாகமணியம்மாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சர்வதேச யோகா தின விழாவிற்கு தாளாளர் காந்தவாசன் தலைமை வகித்தார். இணை செயலர் சுகன்யா முன்னிலை வகித்தார். முதல்வர் புவனேஸ்வரி வரவேற்றார். யோகா ஆசிரியர் துரைராஜேந்திரன், ரவிராம் யோகா செய்வதன் பயன், அவசியம் குறித்து விளக்கினார். ஏற்பாடுகளை துணை முதல்வர்கள் லோகநாதன், சரவணன் செய்திருந்தனர்.கம்பம் நகர் பா.ஜ. சார்பில் கம்ப ராயப் பெருமாள் கோயில் வளாகத்தில் யோகா தினம் கொண்டாடப்பட்டது. நகர் தலைவர் ஈஸ்வரன், மாவட்ட பொதுச் செயலாளர் தங்க பொன்ராசா உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.உத்தமபாளையம் : உத்தமபாளையம் கருத்தராவுத்தர் கல்லூரி மாணவிகள் யோகா விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தினார்கள். தாளாளர் தர்வேஷ் முகைதீன் தலைமை வகித்தார். ஆட்சி மன்ற குழு தலைவர் முகமது மீரான் முன்னிலை வசித்தார். முதல்வர் எச். முகமதுமீரான் வரவேற்றார். கோம்பை நெடுஞ்சாலை உள்ளிட்ட நகரின் முக்கிய வீதிகள் வழியாக வந்த மாணவிகள் யோகா விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி வந்தனர். ஏற்பாடுகளை யோகா கிளப் ஒருங்கினைப்பாளர் வேல்முருகன், ராஜேஷ் கண்ணா, விண்ணொளி செய்திருந்தனர்.காமயகவுண்டன்பட்டி கஸ்தூரிபாய் பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் ஆரம்ப சுகாதார நிலைய சித்தா டாக்டர் சிராதீன் யோகாசனங்களை செய்து காண்பித்து பயன்களை விளக்கினார். மேலும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மகளிர் சுயஉதவிக் குழுவினருக்கு பிராணயாம பயிற்சிகளை வழங்கினார்.கோம்பை : கன்னிகா பரமேஸ்வரி நடுநிலைப்பள்ளியில் தலைமையாசிரியை சித்ரா தலைமையில் நடந்தது. மாணவ மாணவிகள் பல்வேறு ஆசனங்களை செய்தனர். உடற்கல்வி ஆசிரியர் ரதீஷ் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். சிறப்பாக ஆசனங்கள் செய்த மாணவ மாணவிகளுக்கு தலைமையாசிரியை பரிசுகள் வழங்கினார்.சின்னமனூர் : நகர் பா.ஜ. சார்பில் யோகா தினம் அனுஷ்டிக்கப்பட்டது. நகர் தலைவர் லோகேந்திரராசன், முன்னாள் மாவட்ட தலைவர் வெங்கடேசன், நகர் பொதுச் செயலாளர் மாரிச் செல்வம், நகர் துணை தலைவர் செந்தில், இளைஞரணி தலைவர் சசிகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.கூடலுார்: அஞ்சல் துறை சார்பில் லோயர்கேம்ப் பென்னிகுவிக் மணிமண்டபத்தில் தேனி கோட்ட கண்காணிப்பாளர் குமரன் தலைமையில், போடி உபகோட்ட ஆய்வாளர் சதீஷ் முன்னிலை வகித்தார். அஞ்சல் பணியாளர்கள் யோகா பயிற்சியில் ஈடுபட்டனர். பயிற்சியாளர் கருத்தபாண்டி பயிற்சி அளித்தார்.கூடலுாரில் பா.ஜ., சார்பில் மண்டல பார்வையாளர் சிவகுரு தலைமையில், யோகா பயிற்சி வழங்கப்பட்டது. நகரத் தலைவர் முருகேசன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். நலமுடன் வாழ்வதற்கு யோகாசனத்தின் முக்கியத்துவம் குறித்து விளக்கப்பட்டது.போடி: பா.ஜ., சார்பில் உலக யோகா தினம் மாவட்ட தலைவர் பாண்டியன் தலைமையில் நடந்தது. தேசிய பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ், நகர தலைவர் சந்திரசேகர், நகர பொது செயலாளர் தெய்வம், நகர மூத்த நிர்வாகி ராமநாதன் முன்னிலை வகித்தனர். முன்னாள் ராணுவ பிரிவு மாநில தலைவர் ராமன் பயிற்சி மேற்கொண்டார். முன்னாள் ராணுவ பிரிவு தலைவர் வினோத்குமார், வழக்கறிஞர் பிரிவு மாவட்டத் தலைவர் முருகன், போடி ஒன்றிய தலைவர் சஞ்சீவி கணேசன், ஒன்றிய பொது செயலாளர் ரவி, மாவட்ட இளைஞரணி தலைவர் விக்னேஸ்வரன் உட்பட பால் கலந்து கொண்டனர்.உப்புக்கோட்டை பச்சையப்பா நர்சரி,பிரைமரி பள்ளியில் உலக யோகா தினம் தாளாளர் லட்சுமி வாசகன் தலைமையில் நடந்தது. சின்னமனூர் சரஸ்வதி வித்யாலயா பள்ளி தாளாளர் பிரபாகரன், பச்சையப்பா உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் புவனேஸ்வரி, துவக்கப் பள்ளி தலைமையாசிரியர் தங்கம்மாள், பள்ளி முதல்வர் ரஞ்சித் குமார், கல்வி குழும நிர்வாக உறுப்பினர் பச்சையப்பா முன்னிலை வகித்தனர். தென்தமிழ்நாடு வித்யா பாரதி மாநில செயலாளர் நல்லசிவன் மாணவ மாணவிகளுக்கு ராஜா யோகா பயிற்சி அளித்து பயன்கள் குறித்து விளக்கினார்.ஆண்டிபட்டி: லிட்டில் பிளவர் பள்ளியில் தாளாளர் ஹென்றி அருளானந்தம், நிர்வாகி தமயந்தி தலைமையில் நடந்தது. பள்ளி செயலாளர் மாத்யூ ஜோயல் முன்னிலை வகித்தார். யோகாவின் முக்கியத்துவம் குறித்து பள்ளி முதல்வர் உமா மகேஸ்வரி பேசினார். மாணவ, மாணவிகள் யோகா தின உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். பயிற்சியாளர் அமுதவல்லி தலைமையில் மாணவ மாணவிகளுக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது. ஏற்பாடுகளை ஆசிரியைகள் பூமா, கவிதா, ராகினி, பாண்டிச்செல்வி, திவ்யா உட்பட பலர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை