உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கல்லுாரியில் பணிநியமன ஆணை வழங்கும் விழா

கல்லுாரியில் பணிநியமன ஆணை வழங்கும் விழா

தேனி: தேனி நாடார் சரஸ்வதி கலை அறிவியல் கல்லுாரியில் மாணவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் விழா நடந்தது.தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறைத் தலைவர் ராஜமோகன் மாணவிகளுக்கு பணி ஆணை வழங்கினார். துணைத்தலைவர் கணேஷ், பொதுச்செயலாளர் ஆனந்த வேல், பொருளாளர் பழனியப்பன் முன்னிலை வகித்தனர். கல்லுாரியில் இறுதியாண்டு மாணவிகளுக்கு வேலைவாய்ப்புத்துறை சார்பில் பல்வேறு தனியார் நிறுவனங்கள் சார்பில் கல்லுாரி வளாகத்தேர்வு நடந்தது. இதில் 657 மாணவிகள் தேர்வாகினர்.இவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாணவிகள் பெற்றோர்களுடன் பங்கேற்றனர்.விழாவில் கல்லுாரி செயலாளர் காசிபிரபு, இணைச்செயலாளர்கள் செண்பகராஜன், அருண், கல்லுாரி முதல்வர் சித்ரா, துணை முதல்வர்கள் சுசீலா, உமாகாந்தி, கிருஷ்ணவேணி, சரண்யா, கோமதி, வேலைவாய்ப்புத்துறை தலைவர் அகிலாவைஷ்ணவி உள்ளிடடோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை