உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / இந்திய பட்டய கணக்காளர் கிளை தேனியில் துவக்கம்

இந்திய பட்டய கணக்காளர் கிளை தேனியில் துவக்கம்

தேனி : இந்திய பட்டய கணக்காளர் சம்மேளனத்தின் கிளை தேனியில் துவக்கப்பட்டு உள்ளது.தேனியில் ஐ.சி.ஏ.ஐ., எனப்படும் இந்திய பட்டய கணக்காளர் சம்மேளனத்தின், மாவட்ட புதிய கிளை துவங்க விழா பழனிசெட்டிபட்டியில் நடந்தது. நிகழ்வில் தென்னிந்திய ஐ.சி.ஏ.ஐ., கிளையின் துணைத் தலைவர் ரேவதி முன்னிலை வகித்தார். மாவட்டத்தின் முதல் தலைவரான ஆடிட்டர் ஜெகதீஷ், துணைத் தலைவராக ஆடிட்டர் வெங்கடேஸ்வரன் பதவி ஏற்றனர். ஐ.சி.ஐ.,யின் மத்திய கவுன்சில் உறுப்பினர் ஆடிட்டர் ராஜேந்திரகுமார் புதிய கிளையை துவக்கி வைத்து, பதவி பிரமாணம் செய்து வைத்தார். ஆடிட்டர் ஸ்ரீப்ரியா, விஜயகுமார் புதிய கிளைக்கான சான்றிதழை தலைவர், துணைத் தலைவரிடம் வழங்கினர். தென்னிந்திய ஐ.சி.ஏ.ஐ., கிளையின் முன்னாள் தலைவர்கள் ராஜராஜேஸ்வரன், துன்கர்சந்த்ஜெயின், தற்போதைய உறுப்பினர்கள் அருண், ராஜேஷ், மதுரை கிளையின் தலைவர் ஜெயகிருத்திகா வாழ்த்தி பேசினர். சிறப்பு விருந்தினர்களாக தேனி கே.எம்.சி., குழும நிறுவனங்களின் தலைவர் முத்துகோவிந்தன், டாக்டர் உமாகண்ணன், ஐ.சி.ஏ.ஐ.,யின் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகாசி, திருநெல்வேலி, திருச்சி, சேலம், பெங்களூரு கிளைகளின் உறுப்பினர்கள் பங்கேற்றனர். தேனி கிளை தலைவர் ஆடிட்டர் ஜெகதீஸ் பேசுகையில், பயிற்சிக்காக தேனி ஆடிட்டர்கள் மதுரை, கோவை, சென்னை சென்று வந்தனர். இந்த புதிய கிளை துவக்கப்பட்டுள்ளதால் சிரமங்கள் குறையும். சிறந்த பயிற்சியாளர்களை கொண்டு தேனியிலேயே நடத்தப்படும், என்றார். கிளையின் துணைத் தலைவர் ஆடிட்டர் வெங்கடேஸ்வரன் நன்றி தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !