உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / வேதியியலார் பிறந்த நாள் விழா

வேதியியலார் பிறந்த நாள் விழா

தேனி : தேனி நாடார் சரஸ்வதி கலை அறிவியல் கல்லுாரியின் வேதியியல் துறை சார்பில்,ராபர்ட் பிலாய்ட் க்ரூல் பிறந்தநாள் விழா நடந்தது. துறைத் தலைவர் தேவிமீனாட்சி வரவேற்றார். கல்லுாரி செயலாளர், இணைச் செயலாளர்கள் வாழ்த்தினர். நவீன உலகில் நாம் பயன்படுத்தும் கார்பனின் புறவேற்றுமை வடிவமான புள்ளரீன் கண்டுபிடிப்பாளர் ராபர்ட் பிலாய்ட் க்ரூல் பிறந்தாள் கொண்டாடப்பட்டது. அவர் நடத்திய ஆராய்ச்சிகள், வாய்மொழி போட்டிகள், பவர் பாயிண்ட் விளக்கக்காட்சி, நாடகம், வினாடிவினா போட்டிகள் நடத்தப்பட்டன. தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை நிர்வாகிகள், மாணவிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ