உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பள்ளி மாணவர்களுக்கு செஸ் போட்டி

பள்ளி மாணவர்களுக்கு செஸ் போட்டி

ஆண்டிபட்டி : உலக செஸ் தினத்தை முன்னிட்டு ஆண்டிபட்டியில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான செஸ் போட்டி சுப்ரீம் செஸ் அகாடமி சார்பில் நடந்தது. 6 முதல் 9ம் வகுப்பு வரை படிக்கும் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு ஒரு பிரிவாகவும், 10, 11, 12 வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு மற்றொரு பிரிவாகவும் நடந்த போட்டியில் முதல் 5 இடங்கள் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ், நினைவு பரிசு வழங்கப்பட்டது. பரிசளிப்பு நிகழ்ச்சியில் செஸ் போட்டி நடுவர் இலக்கியா வரவேற்றார். வர்த்தக பிரமுகர்கள் சாகுல் ஹமீது, ஜெகன், பேரூராட்சி கவுன்சிலர் கலாவதி ஆகியோர் பரிசுகள் வழங்கினர். ஒருங்கிணைப்புகளை உமா நாராயணன் பதிப்பகம் சார்பில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் செய்திருந்தார். சுப்ரீம் செஸ் அகாடமி நிறுவனர் ராஜபாரதி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை