உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / வராகநதியில் நீர் வரத்து அதிகரிப்பு எச்சரிக்கையை மீறி சிறுவர்கள் குளியல்

வராகநதியில் நீர் வரத்து அதிகரிப்பு எச்சரிக்கையை மீறி சிறுவர்கள் குளியல்

பெரியகுளம்: வராகநதியில் நீர்வரத்து அதிகரிப்பால் மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையை மீறி சிறுவர்கள் ஆபத்தை உணராமல் குளிக்கின்றனர்.பெரியகுளம் பகுதியில் மழையால் வராக நதியில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.சோத்துப்பாறை அணை நிரம்பி இரு தினங்களாக மறுகால் பாய்கிறது.நேற்று வினாடிக்கு60.73கன அடி நீர் வரத்தும், அப்படியே வராக நதியில் கலக்கிறது.இதனால் பொதுப்பணித்துறையினர் வராகநதியில் யாரும் இறங்க கூடாது எனவும், வராகநதி செல்லும் பெரியகுளம், வடுகபட்டி, மேல்மங்கலம், ஜெயமங்கலம் கரையோர பகுதிகளில் குடியிருக்கும் மக்களுக்கு பொதுப்பணித்துறையினர் மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர். தற்போது பள்ளி விடுமுறை என்பதால்நீச்சல் தெரியாத பல சிறுவர்கள் வராக நதியில் ஆபத்தான முறையில் குளிக்கின்றனர். பெற்றோர்கள் நீர் நிலைகளுக்கு பிள்ளைகள் செல்லாமல் இருக்ககண்காணிக்க வேண்டும் என தீயணைப்புதுறையினர் கேட்டுக் கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ