உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / துாய்மை இந்தியா திட்ட விழிப்புணர்வு ஊர்வலம்

துாய்மை இந்தியா திட்ட விழிப்புணர்வு ஊர்வலம்

தேனி : ஆண்டுதோறும் அக்.2ல் துாய்மை இந்தியா திட்டம் அனுசரிக்கப்படுகிறது. நடப்பாண்டில், 'துாய்மையே சேவை' என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. இதன் ஒரு பகுதியாக தேனி தபால் கோட்டத்தின் சார்பில், விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகம் முன் துவங்கிய ஊர்வலத்தை கண்காணிப்பாளர் குமரன் துவக்கி வைத்தார். ஊர்வலம் பெத்தாட்சி விநாயகர் கோயில் சந்திப்பு, பெரியகுளம் ரோடு, நேருசிலை வழியாக பழைய பஸ் ஸ்டாண்ட் வரை சென்று மீண்டும் அதே வழியில் அலுவலகத்தில் நிறைவடைந்தது. ஊர்வலத்தில் தபால்துறை ஊழியர்கள், அதிகாரிகள், பணியாளர்கள் கைகளில் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை