உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / வீரபாண்டி கவுமாரியம்மன் கோயிலில் ரூ.34.77 லட்சம் உண்டியல் வசூல்

வீரபாண்டி கவுமாரியம்மன் கோயிலில் ரூ.34.77 லட்சம் உண்டியல் வசூல்

தேனி : தேனி வீரபாண்டி கவுமாரியம்மன் கோயிலில் கடந்த ஏப்., 26 முதல் ஜூன் 13 வரை கோயில் வளாகங்களில் நிரந்தரமாக12 இடங்களில் வைக்கப்பட்ட உண்டியல்களில் ரூ. 34 லட்சத்து 77 ஆயிரத்து 788 காணிக்கையாக செலுத்தி உள்ளனர்.இக்கோயில் உண்டியல் எண்ணிக்கை நேற்று முன்தினம் (ஜூன் 13ல்) அறநிலையத்துறை உதவி ஆணையர் அன்னக்கொடி தலைமையில் கோயில் வளாகத்தில் நடந்தது. செயல் அலுவலர் மாரிமுத்து, அறநிலையத்துறை ஆய்வாளர் தியாகராஜன், மேலாளர் பாலசுப்ரமணியம், கணக்காளர் பழனியப்பன் முன்னிலை வகித்தனர். வீரபாண்டி சவுராஷ்டிரா கல்வியியல் கல்லுாரி மாணவ, மாணவிகள், பேராசிரியர்கள் உண்டியல் எண்ணும் பணிகளில் ஈடுபட்டனர். கோயில் வளாகங்களில் 12 இடங்களில் வைக்கப்பட்ட நிரந்தர உண்டியல்களில் பக்தர்கள் செலுத்திய 34 லட்சத்து 77 ஆயிரத்து 788 ரூபாய் ரொக்கம், 144 கிராம் தங்கத்திலான காணிக்கை பொருட்கள், 470 கிராம் வெள்ளியிலான காணிக்கைப் பொருட்கள் பக்தர்கள் உண்டியலில் செலுத்தியிருந்தது தெரியவந்தது. கடந்த ஆண்டு ரூ.31.76 லட்சம் வசூலானது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை