உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / இடுக்கி தொகுதியில் ஓட்டு சேகரிப்பில் காங்., இடசாரி வேட்பாளர்கள் தீவிரம்

இடுக்கி தொகுதியில் ஓட்டு சேகரிப்பில் காங்., இடசாரி வேட்பாளர்கள் தீவிரம்

மூணாறு: இடுக்கி லோக்சபா தொகுதியில் காங்., மற்றும் இடது சாரி கூட்டணி வேட்பாளர்கள் தீவிரமாக ஓட்டுகள் சேகரித்து வருகின்றனர்.தொகுதியில் காங்., கூட்டணியில் ' சிட்டிங்' எம்.பி. டீன்குரியாகோஸ், இடது சாரி கூட்டணியில் ஜாய்ஸ்ஜார்ஜ், பா.ஜ. கூட்டணியில் சங்கீதா ஆகியோர் போட்டியிடுகின்றனர். பா.ஜ. கூட்டணி வேட்பாளரை கடந்த வாரம் அறிவித்ததால் தேர்தல் பணியில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. அதே சமயம் காங்., மற்றும் இடது சாரி கூட்டணி வேட்பாளர்களை அதிகாரபூர்வமாக அறிவிக்கும் முன்னர் தேர்தல் பணியை ஒரு மாதத்திற்கு முன்பு துவக்கினர். தற்போது இரு கூட்டணி வேட்பாளர்களும் ஓட்டு சேகரிப்பில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.காங்., கூட்டணி வேட்பாளர் டீன் குரியா கோஸ் நேற்று பீர்மேடு சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட ஐய்யப்பன் கோவில், மேரிகுளம், மாட்டுக்கட்டா, பரப்பு, உப்புதரா, வாகமண் உள்பட பல்வேறு பகுதிகளில் ஓட்டுகள் சேகரித்தார். வாகமண்ணில் நடந்த தேர்தல் பொது கூட்டத்திலும் பங்கேற்றார். மாலையில் பெருவந்தனம் பகுதியில் பல்வேறு பள்ளிவாசல்களில் இப்தார் நோம்பு திறக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.இடது சாரி கூட்டணி வேட்பாளர் ஜாய்ஸ்ஜார்ஜ் நேற்று அடிமாலி, பைசன்வாலி ஆகிய ஊராட்சிகளில் ஓட்டுகள் சேகரித்தார். அடிமாலி ஊராட்சியில் மலைவாழ் மக்கள் வசிக்கும் 16 குடிகளில் (கிராமம்) ஓட்டு சேகரித்தார். அப்போது மலைவாழ் மக்கள் மாலைகள் அணிவித்து வரவேற்பு அளித்தனர். பைசன்வாலி ஊராட்சியில் அனைத்து பகுதிகளிலும் பல்வேறு தரப்பினரை சந்தித்து ஓட்டுகள் சேகரித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ