விலங்கியல் துறையில் தற்போதைய சவால்கள்
உத்தமபாளையம்: உத்தமபாளையம் கருத்தராவுத்தர் கல்லூரியில் விலங்கியல் துறை சார்பில் இத்துறையில் தற்போதைய சவால்கள் மற்றும் வாய்ப்புக்கள் என்ற தலைப்பில் பயிலரங்கம் நடைபெற்றது. பயிலரங்கத்திற்கு கல்லூரியின் உள்தர உறுதிப்பிரிவு ஒருங்கிணைப்பாளர் முகமது சமீம் தலைமை வகித்தார். திருச்சி ஜமால் முகமது கல்லூரியின் பேராசிரியர் மீரா மைதீன், 'விலங்கியல் துறையில் தற்போதைய சவால்கள்,வாய்ப்புக்கள் குறித்தும், படிப்பை முடித்த பின் வேலை வாய்ப்புக்களை பெறுவது' குறித்தும் விளக்கினார். முன்னதாக விலங்கியல் துறை தலைவர் ஆரியா பானு வரவேற்றார். பயிலரங்கில் துணை ஒருங்கிணைப்பாளர்கள் இஸ்ஷாக் மற்றும் விலங்கியல் துறை பேராசிரியர்கள் , மாணவ மாணவிகள் பங்கேற்றனர். மாணவர்களின் சந்தேகங்களுக்கு சிறப்பு விருந்தினர் பதிலளித்தார். உதவி பேராசிரியர் பாசில் முகமது நன்றி கூறினார்