உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கால்நடைகளுக்கு தோல் கழலை நோய் தடுப்பூசி கண்டுபிடிக்க வேண்டும்: லோக்சபாவில் தேனி எம்.பி., வலியுறுத்தல்

கால்நடைகளுக்கு தோல் கழலை நோய் தடுப்பூசி கண்டுபிடிக்க வேண்டும்: லோக்சபாவில் தேனி எம்.பி., வலியுறுத்தல்

தேனி: கால்நடைகளுக்கு ஏற்படும் தோல் கழலை நோயை கட்டுப்படுத்த தடுப்பூசி கண்டுபிடிக்க வேண்டும். டோல்கேட்டுகளில் பால் வாகனங்களுக்கு கட்டண விலக்கு அளிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி லோக்சபாவில் தேனி எம்.பி., தங்கதமிழ்செல்வன் பேசினார்.லோக்சபா மானிய கோரிக்கையில் எம்.பி., தங்கதமிழ்செல்வன் பேசியதாவது: தமிழகத்தில் உள்ள கால்நடை மருத்துவக்கல்லுாரிகளுக்கு உட்கட்டமைப்பு வசதிக்காக, தேசிய கால்நடை மிஷன் திட்டத்தில் 200கோடி நிதி ஒதுக்க வேண்டும்.தேனி மாவட்டத்தில் மலைமாடுகள் இனத்தை பாதுகாக்க, மேம்படுத்த மாநில அரசு ஆராய்ச்சி நிறுவனம் அமைக்க முடிவு செய்துள்ளது. அதற்கு மத்திய அரசு நிதி ஒதுக்க வேண்டும். கால்நடைகளில் ஏற்படும் கோமாரி, கருச்சிதைவு நோய்களுக்கு ஆண்டுக்கு 3 தடுப்பூசி வழங்க பரிந்துரைக்க வேண்டும். தோல் கழலை நோய்க்கு தடுப்பூசி கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். டோல்கேட்டில் பால் வாகனங்களுக்கு கட்டண விலக்கு வழங்க வேண்டும். திண்டுக்கல் சபரிமலை திட்டம், போடி- உசிலம்பட்டி பைபாஸ் ரோடு, முல்லை பெரியாறு அணையின் பேபி அணையை பலப்படுத்தி தண்ணீரை 152அடி தேக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை