உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ஆடிக்காற்று அபாயம் : குமுளி மலைப் பாதையில் எச்சரிக்கை

ஆடிக்காற்று அபாயம் : குமுளி மலைப் பாதையில் எச்சரிக்கை

கூடலுார்: 'ஆடி காற்று அதிகம் வீசுவதால் குமுளி மலைப் பாதையில் செல்லும் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும்.' என, எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.ஆடி மாதம் துவங்குவதற்கு முன்பே காற்றுடன் மழையும் அதிகம் பெய்தது. கடந்த சில நாட்களாக ஆடிக் காற்று மிகக் கூடுதலாக வீசுகிறது. தமிழக கேரளாவை இணைக்கும் முக்கிய வழித்தடமாக உள்ள குமுளி மலைப் பாதையில் பல ஆபத்தான மரங்கள் உள்ளன. பல இடங்களில் மண் சரிவு அபாயமும் உள்ளது. அதனால் டூவீலர், கார்களில் செல்பவர்கள் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் எனவும், கனமழை பெய்யும் போது இரவு நேரங்களில் குமுளி மலைப் பாதையில் டூவீலர்களில் செல்வதை தவிர்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி