உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தேனிக்கு கஞ்சா சப்ளை செய்த வியாபாரி ஆந்திராவில் கைது

தேனிக்கு கஞ்சா சப்ளை செய்த வியாபாரி ஆந்திராவில் கைது

கம்பம்:தேனிக்கு கஞ்சா சப்ளை செய்த மொத்த வியாபாரி நாகமணி என்ற பைப்பு ரெட்டியை 35,தேனி தனிப்படை போலீசார் ஆந்திராவில் கைது செய்தனர்.தேனி மாவட்டம், கம்பம் பகுதியில் பல ஆண்டுகளாக கஞ்சா விற்பனை நடக்கிறது. பெரும்பாலும் ஆந்திராவில் இருந்து கடத்தி வந்து விற்கப்படுகிறது.மொத்த வியாபாரிகளை கைது செய்ய எஸ்.பி. சிவபிரசாத் உத்தரவிட்டார். டி.எஸ்.பி. செங்கோட்டு வேலன் தலைமையில் இன்ஸ்பெக்டர் பார்த்திபன், எஸ்.ஐக்கள் கதிரேசன், இளையராஜா, மணிகண்டன் அடங்கிய தனிப்படையினர் ஆந்திராவில் முகாமிட்டு மொத்த வியாபாரிகளை கைது செய்து தேனிக்கு கொண்டு வந்தனர்.இது குறித்து எஸ்.பி. நேற்று கம்பத்தில் நிருபர்களிடம் கூறியதாவது: கடந்த ஆண்டு அக். 24ல் கூடலூர் போலீசார் 1கிலோ 100 கிராம் கஞ்சா ஆயில் பறிமுதல் செய்தனர். இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த மொத்த வியாபாரி ஆந்திராவை சேர்ந்த மோகி ரெட்டி வெங்கடேஷ்வர ராவ் 35, 2023 செப்.30ல் 10.5 கிலோ கஞ்சா பறிமுதல் வழக்கில் தலைமறைவாக இருந்த ஆந்திரா மொத்த வியாபாரி செல்லி பாபு 38, ஆகியோரை ஆந்திராவில் கடந்த வாரம் தேனி தனிப்படை போலீசார் கைது செய்தனர்.2023 டிச. 4 ல், கம்பத்தில் 4 கிலோ கஞ்சா பறிமுதல் வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களுக்கு சப்ளை செய்த ஆந்திரா மொத்த வியாபாரி நாகமணி என்ற பைப்பு ரெட்டியை 35, இன்ஸ்பெக்டர் பார்த்திபன் தலைமையிலான போலீசார் ஆந்திராவில் கைது செய்தனர். அப்போது வீட்டில் இருந்த 25 கிலோ கஞ்சா பறிமுதல் செய்தனர் என்றார். உத்தமபாளையம் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நாகமணி ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி