உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கடைகளில் மது குடிக்க அனுமதித்தால் 3 மாதங்களுக்கு சீல் வைக்க முடிவு

கடைகளில் மது குடிக்க அனுமதித்தால் 3 மாதங்களுக்கு சீல் வைக்க முடிவு

தேனி: 'மாவட்டத்தில் இயங்கிவரும் கடைகளில் மது குடிக்க அனுமதித்தால், அந்த கடைகளுக்கு 3 மாதங்கள் 'சீல்' வைக்கப்படும்.' என, கலால்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.கலால்துறை அதிகாரிகள் கூறுகையில், 'மாவட்டத்தில் அனுமதி பெற்ற பார்களை தவிர, மற்ற இடங்களில் பொறித்த சிக்கன், மீன் விற்பனை கடைகள், ஓட்டல்கள், அசைவ உணவுகளை விற்கும் கடைகள், பெட்டி கடைகளில் மது குடிக்க அனுமதி இல்லை. இவ்விடங்களில் மது அருந்த அனுமதிப்பதால், பிற வாடிக்கையாளர்களும் பாதிக்கப்படுகின்றனர்.தமிழகத்தில் மது தடுப்பு திருத்தச் சட்டம் 2024ன் படி மேற்குறிப்பிட்ட கடைகளில் மது அருந்தினால், அனுமதித்த கடைகள் 3 மாதங்களுக்கு 'சீல்' வைக்கப்படும். மேலும் அபராதம், கடைகாரர்களுக்கு சிறை தண்டனை வழங்கப்படும். இந்த சட்ட விதிகளை பின்பற்றி மாவட்டம் முழுவதும் தாசில்தார்கள் நிலையிலான அதிகாரிகள் ஆய்வுகள் மேற்கொள்ள உள்ளனர்.தங்கள் பகுதிகளில் அனுமதியின்றி மது விற்பனை நடந்தால் பொது மக்கள் 93638 73078 என்ற அலைபேசி எண்ணில் புகார் தெரிவிக்கலாம்.புகார் தெரிவிப்பவர்கள் பற்றிய ரகசியம் பாதுகாக்கப்படும்., என தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை