உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / இடுக்கியில் பருவ மழை குறைவு தொற்று நோய்கள் அதிகரிப்பு

இடுக்கியில் பருவ மழை குறைவு தொற்று நோய்கள் அதிகரிப்பு

மூணாறு : இடுக்கி மாவட்டத்தில் பருவ மழை குறைவு என்றபோதும் தொற்று நோய்கள் அதிகரித்து வருகின்றன.கேரளாவில் இந்தாண்டு தென் மேற்கு பருவ மழை வழக்கத்தை விட முன்கூட்டியே மே 30ல் துவங்கியது. எனினும் ஜூனில் சராசரி மழையை எட்டவில்லை.இடுக்கி மாவட்டத்தில் பருவ மழை ஜூனில் 44 சதவிகிதம் குறைவு என தெரியவந்தது.மாவட்டத்தில் மத்திய வானிலை ஆய்வு மையம் கணக்குப்படி ஜூன் ஒன்று முதல் நேற்று முன்தினம் வரை 538.9 மி.மீ., மழை பதிவானது. இதே கால அளவில் சாதாரணமாக 958.9 மி.மீ., மழை பெய்ய வேண்டும். மாநில அளவில் பருவ மழை குறைவு பட்டியலில் இடுக்கி மாவட்டம் முதலிடம் வகிக்கிறது.மாவட்டத்தில் பல பகுதிகளில் பலத்த மழை பெய்தபோதும் எதிர்பார்த்த அளவு பெய்யவில்லை.அதிகரிப்பு: மாவட்டத்தில் பருவ மழை குறைவு என்றபோதும் தொற்று நோய்கள் அதிகரித்தன. குறிப்பாக வைரஸ், டெங்கு காய்ச்சல் அதிகரித்தது. நேற்று முன்தினம் மட்டும் வைரஸ் காய்ச்சல் பாதிக்கப்பட்ட 432 பேர் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றனர். இம்மாதம் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 2755 பேர் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றதாக சுகாதார துறையினர் கணக்கிட்டனர். நேற்று முன்தினம் ஐந்து பேருக்கு டெங்கு காய்ச்சல் கண்டறியப்பட்ட நிலையில் இம்மாதம் இதுவரை 39 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.தவிர தலா இருவருக்கு எலி காய்ச்சல், பன்றி காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்