ஆர்ப்பாட்டம்..
தேனி, : தேனி லட்சுமிபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன் தேனி வழக்கறிஞர் சங்கம் சார்பில், வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டம் இயற்ற வேண்டும். சேமநல நிதியை ரூ.30 லட்சமாக உயர்த்தி வழங்கிடவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. தலைவர் சந்தானகிருஷ்ணன், செயலாளர் செல்வகுமார், சீனியர் வழக்கறிஞர் மாரியப்பன், உறுப்பினர்கள் கனகராஜ், தமிழ்மணி, நிர்வாகிகள் ஆனந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.