உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / வடமலை நாச்சியம்மன் கோயிலுக்கு ரோடு வசதி இன்றி பக்தர்கள் சிரமம்

வடமலை நாச்சியம்மன் கோயிலுக்கு ரோடு வசதி இன்றி பக்தர்கள் சிரமம்

போடி : போடி ஒன்றியம், அணைக்கரைப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ளது வடமலை நாச்சியம்மன் கோயில். 650 ஆண்டுகளுக்கு முன்பு கண் கொடுத்த ராசுநாயக்கர் காலத்தில் இக்கோயில் உருவானது. போடியில் இருந்து 7 கி.மீ., தூரம் ரோடு வசதி உள்ளது. 2 கி.மீ., தூரம் ரோடு வசதி இன்றி மலைப் பாதையில் நடந்து செல்ல வேண்டும். பல நூற்றாண்டுகளுக்கு முன்பு உருவான கோயிலில் வாரம் தோறும் வெள்ளி கிழமை பகல் 12 மணி அளவில் உச்சி கால பூஜையும், மாதம் தோறும் பவுர்ணமி பூஜைகள் நடப்பது வழக்கம்.முன்பு பாதை வசதி இல்லாமல் இருந்தது. விவசாயிகள் மட்டுமின்றி வெளியூரில் இருந்து பக்தர்களின் வருகை அதிகரித்து வருவதை முன்னிட்டு கோயில் நிர்வாகம், விவசாயிகள் இணைந்து கோயிலுக்கு செல்லும் பாதையின் இருபுறமும் ஆக்கிரமித்து இருந்த மரங்களை அகற்றி 2 கி.மீ., தூரம் ரோடுக்கான பாதை வசதி ஏற்படுத்தி உள்ளனர்.தற்போது ரோடு வசதி இன்றி குண்டும், குழியுமாகவும், மண் பாதையாக உள்ளதால் 2 கி.மீ., தூரம் பக்தர்கள் நடந்து செல்வதோடு, விளை பொருட்களை விவசாயிகள் தலைச் சுமையாக கொண்டு வரும் நிலையில் சிரமம் அடைந்து வருகின்றனர். பக்தர்கள், விவசாயிகளின் சிரமங்களை தவிர்க்கும் வகையில் வடமலை நாச்சியம்மன் கோயிலுக்கு ரோடு வசதி செய்து தர போடி ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை