உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மாவட்ட அளவிலான ஊராட்சி செயலாளர்கள் ஆலோசனை கூட்டம்

மாவட்ட அளவிலான ஊராட்சி செயலாளர்கள் ஆலோசனை கூட்டம்

தேனி : 'கலெக்டர் அலுவலகம் முன் ஆக.,21ல் நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் அனைத்து ஊராட்சி செயலாளர்களும் பங்கேற்க வேண்டும்.' என, ஊராட்சிச் செயலாளர்கள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.மாவட்ட அளவிலான ஊராட்சி செயலாளர்கள் கூட்டம் முல்லை நகர் தேனி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட தலைவர் பாலமுருகன் தலைமை வகித்தார்.தமிழக அரசின் ஓய்வூதிய திட்டத்தில் ஊராட்சிச் செயலாளர்களை இணைக்கக் கோரி பல முறை வலியுறுத்தியும் நடவடிக்கை இல்லை. மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி ஆக.,21ல் தற்செயல் விடுப்பெடுத்து, கலெக்டர் அலுவலகம் முன் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும். என்றார்.கூட்டத்தில் மாவட்டச் செயலாளர் சுருளி, பொருளாளர் பன்னீர்செல்வம், மாநில நிர்வாகிகள் குமரேசன், சுந்தரபாண்டி, திலகவதி, ரதவேல், சாகுல் ஹமீது உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி