தி.மு.க., கண்டன ஊர்வலம்
ஆண்டிபட்டி: மத்திய அரசின் மும்மொழி கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க., சார்பில் ஆண்டிபட்டியில் கண்டன ஊர்வலம் நடந்தது. ஆண்டிபட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் ராஜாராம், நகர் செயலாளர் சரவணன், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் சேது ராஜா ஆகியோர் தலைமையில் நடந்தது. ஆண்டிபட்டி அரசு மருத்துவமனை அருகே துவங்கிய ஊர்வலம் பஸ் ஸ்டாண்டில் முடிந்தது. அங்கு நடந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ., ஆசையன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் பாண்டியன் உட்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.