சின்னமனூர் அரசு மருத்துவமனையில் ரூ.3.50 கோடியில் அவசர சிகிச்சை பிரிவு
சின்னமனூர்: சின்னமனூர் அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவிற்கான புதிய கட்டடம் கட்ட ரூ.3.50 கோடி அனுமதிக்கப்பட்டுள்ளது.சின்னமனூர் நகராட்சியை சுற்றிலும் 20 க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. மேகமலை கிராமங்கள் இம் மருத்துவமனையை நம்பி உள்ளது. ஆனால் இங்கு படுக்கைகள் இரட்டை இலக்கத்தில் உள்ளது. போதிய டாக்டர்கள் இல்லை. தேசிய நெடுஞ்சாலையில் இருப்பதால் தினமும் விபத்துக்களில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்கென கொண்டு வரப்படுகின்றனர். ஆனால் விபத்து அவசர சிகிச்சை பிரிவு இல்லை.இந்நிலையில் 15 வது நிதிக்குழு மானியம், மத்திய சுகாதார இயக்கத்தின சார்பில் சின்னமனூர் அரசு மருத்துவமனையில் விபத்து அவசர சிகிச்சை பிரிவு அமைக்க ரூ.3.50 கோடி அனுமதித்துள்ளது. இதற்கான மதிப்பீடு தயார் செய்து அனுப்ப சின்னமனூர் நகராட்சி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.மருத்துவ அலுவலர் சிவக்குமார் கூறுகையில் , விபத்து அவசர சிகிச்சை பிரிவு, ஆய்வக வசதி உள்ளிட்ட பல வசதிகள் கொண்ட கட்டடம் கட்ட ரூ.3.50 கோடி அனுமதிக்கப்பட்டுள்ளது. விரைவில் அதற்கான பணிகள் துவங்கும் என்றார்.