உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஆய்வகங்கள் செயல்படுத்த வலியுறுத்தல்

அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஆய்வகங்கள் செயல்படுத்த வலியுறுத்தல்

உத்தமபாளையம்: அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஆய்வகங்கள் முழுமையாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.தேனி மாவட்டத்தில் கம்பம், உத்தமபாளையம், போடி, சின்னமனுார், பெரியகுளம், ஆண்டிபட்டி, கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை, தேனி உள்ளிட்ட 9 வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன. ஒவ்வொரு வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்தின் கட்டுப்பாட்டிலும் குறைந்தது 3 முதல் 4 கூடுதல் ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன. இது தவிர நகராட்சிகளில் நகர்புற சுகாதார நிலையங்களும் உள்ளன. கிராமங்களில் துணை சுகாதார நிலையங்களும் செயல்பட்டு வருகின்றன.கிராமங்களில் வசிப்பவர்கள் நூற்றுக்கணக்கில் பல்வேறு உடல் உபாதைகளுக்கு என ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு செல்கின்றனர். அங்கு ரத்தம், சளி, சிறுநீர் உள்ளிட்ட பரிசோதனைகள் செய்ய முடியாத நிலை உள்ளது.வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்களில் மட்டும் லேப் வசதி உள்ளது. டெக்னீசியன் இருப்பார். ஆனால் மற்ற ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஆய்வக வசதி இருந்தாலும், டெக்னீசியன் இல்லை.டெக்னீசியன் இருந்தால் மூலப்பொருள்கள் இருக்காது. தனியார் லேப்களை நோக்கி மக்கள் செல்ல வேண்டிய நிலை தான் உள்ளது. அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் ஆய்வகங்கள் செயல்படுவதை மாவட்ட துணை இயக்குனர் உறுதி செய்ய வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை