உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ரோடு அகலப்படுத்தும் பணி முடிந்தும் மின் கம்பங்கள் மாற்றாததால் அபாயம் போடியில் இருளில் முழ்கிய பாலம்

ரோடு அகலப்படுத்தும் பணி முடிந்தும் மின் கம்பங்கள் மாற்றாததால் அபாயம் போடியில் இருளில் முழ்கிய பாலம்

போடி: போடி மேலச்சொக்கநாதபுரம் விலக்கில் இருந்து அரசு போக்குவரத்துக் கழக டெப்போ வரை ரூ.10.50 கோடி செலவில் ரோடு அகலப்படுத்தும் பணி முடிந்தம் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள மின்கம்பங்களை மாற்றி அமைக்காததால் விபத்து ஏற்படும் நிலை உள்ம்.போடி தேவாரம் செல்லும் ரோடு மேலச் சொக்கநாதபுரம் விலக்கில் இருந்து போடி அரசு போக்குவரத்து கழக டெப்போ வரை 2 கி.மீ., தூரம் 30 அடி ரோடாக இருந்தது. ரோட்டின் இருபுறமும் ஆக்கிரமிப்பில் இருந்ததால் கனரக வாகனங்கள் மட்டுமின்றி, மற்ற வாகனங்களில் செல்லவும் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர். நாளுக்கு நாள் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் போக்குவரத்து இடையூறும் ஏற்பட்டது. இதனை தவிர்க்கும் வகையில் நெடுஞ்சாலைத் துறை ஒருங்கிணைந்த சாலை மேம்பாடு திட்டத்தின் கீழ் ரூ.10 கோடியே 50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து, மேலச்சொக்கநாதபுரம் விலக்கில் இருந்து அரசு போக்குவரத்துக் கழக டெப்போ வரை 30 அடி ரோடாக இருந்ததை 45 அடியாக அகலப்படுத்தி 3 இடங்களில் பாலங்கள், மேலச்சொக்கநாதபுரம் நாக கவுண்டர் ஊரணி ஓடை அருகே தடுப்புச் சுவர், ரோட்டின் இடையே சென்டர் மீடியட் அமைப்பதற்கான பணிகள் நடந்தது. பணிகள் முடிந்து ஒரு மாதம் ஆகியும் ரோட்டின் மையத்தில் இருந்த மின்கம்பங்களை மாற்றி அமைக்காமல் உள்ளது. மின் கம்பங்கள் இருந்தும் விளக்கு வசதி இல்லாததால் இரவில் இருளில் மூழ்கி காணப்படுகிறது. வாகனங்களில் வேகமாக வரும் போது ரோட்டின் நடுவே உள்ள மின் கம்பங்கள் தெரியாமல் அடிக்கடி வாகன விபத்துக்கள் ஏற்படுகின்றன. பெரிய அளவில்அசம்பாவிதம் ஏற்படும் முன் ரோட்டின் மையத்தில் அமைந்துள்ள மின்கம்பங்களை மாற்றி அமைத்திட நெடுஞ்சாலை துறை, மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை