உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / சாலைப்பணியாளரை மிரட்டி பணம் வழிப்பறி

சாலைப்பணியாளரை மிரட்டி பணம் வழிப்பறி

தேவதானப்பட்டி, : தேவதானப்பட்டி அருகே டூவீலரில் சென்ற சாலை பணியாளரை வழிமறித்து ரூ.5 ஆயிரம், அலைபேசியை பறித்துக் சென்ற மூவரை போலீசார் தேடுகின்றனர்.நிலக்கோட்டை அருகே குளிப்பட்டியைச் சேர்ந்தவர் திருமலைச்சாமி 57. சாலைப் பணியாளராக பணிபுரிந்து வருகிறார். தனது அக்கா மகன் பிரபுவுடன், தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தனது தங்கை மகள் குழந்தையை பார்க்க டூவீலரை ஓட்டி சென்றார். வைகை அணை ரோடு கதிரப்பன்பட்டி பகுதியில் செல்லும் போது, டூவீலரில் வந்த மர்ம நபர்கள் மூன்று பேர் திருமலைச்சாமியை வழிமறித்தனர். திருமலைச்சாமியை மிரட்டி சட்டைப்பையில் இருந்த ரூ.5 ஆயிரம், அலைபேசியை பறித்துக் கொண்டு தப்பினர். தேவதானப்பட்டி எஸ்.ஐ., வேல் மணிகண்டன் வழிப்பறி திருடர்கள் மூவரை தேடி வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை