உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மா பதனிடும் நிலையத்தை பயன்படுத்த விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்

மா பதனிடும் நிலையத்தை பயன்படுத்த விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்

தேனி: கெங்குவார்பட்டி அருகே அமைந்துள்ள மா முதன்மை பதனிடும் நிலையத்தை வாடகைக்கு பயன்படுத்த விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என வேளாண் வணிகத்துறை துணை இயக்குனர் மெர்ஸி ஜெயராணி தெரிவித்துள்ளார்.தேனி வேளாண் விற்பனை வணிகத்துறைக்கு சொந்தமான மா முதன்மை பதனிடும் நிலையம் கொங்குவார்பட்டி அருகே காட்ரோட்டில் அமைந்துள்ளது.இங்கு ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட கிடங்கு, மா கூல் எடுக்கும் இயந்திரம்,குளிர்பதன கிடங்கு, அலுவலக அறை, மின் இணைப்பு, ஓய்வு அறை வசதிகள் உள்ளன. இந்த கூடம் ஒப்பந்த அடிப்படையில் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம், விவசாயிகள் சங்கம், தனியார் நிறுவனத்திற்கு வாடகைக்கு விடப்பட உள்ளது.விருப்ப முள்ளவர்கள் வேளாண் துணை இயக்குனர், வேளாண் விற்பனை, வணிகத்துறை, தேனி ஒழுங்குமுறை விற்பனைக்கூட வளாகம் சுக்குவாடன்பட்டி, தேனி 625 531 என்ற முகவரிக்கு கடிதம் அனுப்பலாம்.மேலும் விபரங்களுக்கு உதவி இயக்குனரை 96260 06374 என்ற அலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என வேளாண் வணிகத்துறை துணை இயக்குனர் தெரிவித்துஉள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி