உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / வீரபாண்டியில் இலவச மருத்துவ முகாம்

வீரபாண்டியில் இலவச மருத்துவ முகாம்

தேனி: தேனி வீரபாண்டி கௌமாரியம்மன் கோயில் திருவிழாவிற்கு வருகை தரும் பக்தர்கள் வசதிக்காக தேனி நட்டாத்தி நாடார் மருத்துவமனை, கருத்தரித்தல் மையம் சார்பில் 24 மணி நேர இலவச மருத்துவ பரிசோதனை முகாம் துவக்க விழா நேற்று காலை நடந்தது.வீரபாண்டி பேரூராட்சி தலைவர் கீதா குத்துவிளக்கு ஏற்றி இலவச மருத்துவ முகாமை துவக்கி வைத்தார். திருவிழாவிற்கு வந்து நோய்வாய்ப்பட்ட பக்தர்கள், நெருப்பு கங்குகள் மிதித்து காயமடைந்தவர்கள், ஆற்றில் கிடந்த பாட்டில் காலில் குத்தியதால் காயமடைந்தவர்கள், குழந்தைகள், போலீசார் என 60 க்கும் மேற்பட்டவர்களுக்கு சிகிச்சை, முதல் உதவியும், மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டன. மேலும் தேவை பட்டவர்களுக்கு ஈ.சி.ஜி., பார்க்கப்பட்டது. இந்த முகாமில் அவசர சிகிச்சை அளிக்க தேவையான கருவிகள், ஆம்புலன்ஸ் வாகனம், இரவு பகல் சிகிச்சை அளிக்க டாக்டர்கள், செவிலியர்கள் ஷிப்ட் முறையில் பணியாற்றுகிறார்கள்.வீரபாண்டி பேரூராட்சி தலைவர் கீதா, நட்டாத்தி நாடார் மருத்துவமனை பொது மேலாளர் சாந்தி, மார்க்கெட்டிங் மேலாளர் சலீம், மக்கள் தொடர்பு அலுவலர் ஷேக் பரீத் மற்றும் மக்கள் தொடர்பு அலுவலர்கள் தீபன் மற்றும் அப்பாஸ் ஆகியோர் செய்து இருந்தார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ