உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கஞ்சா வியாபாரிக்கு ஐந்து ஆண்டுகள் சிறை; தொடுபுழா சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

கஞ்சா வியாபாரிக்கு ஐந்து ஆண்டுகள் சிறை; தொடுபுழா சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

மூணாறு: கஞ்சா கடத்திய வழக்கில் போடி குப்பிநாயக்கன்பட்டி கஞ்சா வியாபாரி கருப்பையாவுக்கு 55, ஐந்து ஆண்டுகள் சிறை, ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து தொடுபுழா மாவட்ட போதைப் பொருட்கள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.அவர், 2015 பிப்.20ல் தமிழகத்தில் இருந்து கஞ்சா கடத்தி வந்தார். அப்போது போடிமெட்டில் கேரள கலால்துறை செக்போஸ்ட்டில் சிக்கினார். இந்த வழக்கு தொடுபுழா மாவட்ட போதை பொருட்கள் தடுப்புச் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஹரிகரன், குற்றவாளி கருப்பையாவுக்கு ஐந்து ஆண்டுகள் சிறை, ரூ. 25 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ