உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கவுமாரியம்மன் வைகாசி திருவிழா

கவுமாரியம்மன் வைகாசி திருவிழா

தேனி, : தேனி ரத்தினம் நகர் செல்வ விநாயகர், கவுமாரியம்மன் கோயில்களில் வைகாசி திருவிழா மே 14ல் கொடி ஏற்றத்துடன் துவங்கியது. கம்பம் நடப்பட்டு, பக்தர்கள் கங்கணம் கட்டி விரதம் துவக்கினர். மே 16ல் முகூர்த்த கால் நடப்பட்டு தினசரி அம்மன், விநயாகருக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்து, பூஜை, தீபாராதனைகள் நடந்து வந்தன. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். இன்று அம்மன் கரகம் எடுத்தலும், மாவிளக்கு நேர்த்திகடன் நிறைவேற்றுதல் நடக்க உள்ளன. இதனை தொடர்ந்து நாளை பொங்கல் வைத்தல், தீச்சட்டி எடுத்தல் நடக்க உள்ளது. ஏற்பாடுகளை செல்வவிநாயகர் கோயில் திருவிழா குழுவினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி