உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / சுருளியாறு மின் நிலையத்தில் 2 நாட்களுக்கு ஒரு முறை உற்பத்தி

சுருளியாறு மின் நிலையத்தில் 2 நாட்களுக்கு ஒரு முறை உற்பத்தி

கம்பம் : சுருளியாறு மின் நிலையத்தில் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை மின் உற்பத்தி நடைபெறுகிறது. அணைகளில் நீர் மட்டம் குறைந்ததால் மின் உற்பத்தி தினமும் செய்ய முடியவில்லை.தேனி மாவட்டத்தில் நீர் மின் உற்பத்தி நிலையங்கள் என லோயர்கேம்ப் மற்றும் வண்ணாத்திபாறை வனப்பகுதியில் அமைந்துள்ளது. லோயர்கேம்பில் 168 மெகாவாட் , சுருளியாறு மின் நிலையத்தில் 35 மெகா வாட் மின் உற்பத்தி நடைபெறுகிறது.தேவைக்கேற்ப உற்பத்தி செய்வார்கள். தற்போது மேகமலை அணைகளில் நீர்மட்டம் மிக குறைந்து விட்டதால், இரண்டு நாட்களுக்கு ஒரு முறை மின் உற்பத்தி நடைபெறுகிறது. 20 மெகாவாட் மின் உற்பத்தி தேவைக்கேற்ப மேற்கொள்ளப்படுகிறது-. அதுவும் இன்னமும் 10 நாட்களுக்கு தான் தண்ணீர் இருக்கும். அதன் பின் மழை பெய்தால் தான் மின் உற்பத்தி தொடர்ந்து மேற்கொள்ள முடியும் என்று மின்வாரிய வட்டாரங்கள் கூறியுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்













அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை