உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / சிறுமிகள் திருமணம்: 8 பேர் மீது வழக்கு

சிறுமிகள் திருமணம்: 8 பேர் மீது வழக்கு

கடமலைக்குண்டு : உசிலம்பட்டி அருகே விக்கிரமங்கலத்தைச் சேர்ந்த அமரன் என்பவரின் 16 வயது மகளுக்கும், கடமலைக்குண்டு அருகே குமணன்தொழுவைச் சேர்ந்த ரஞ்சித் குமார் 29 என்பவருக்கும் ஜூலை 7ல் குமணன்தொழுவில் உள்ள மாரியம்மன் கோயிலில் திருமணம் நடந்தது. இது குறித்து தகவல் அறிந்த சமூக நலத்துறை விரிவாக்க அலுவலர் மலர்கொடி கொடுத்த புகாரில் ஆண்டிபட்டி அனைத்து மகளிர் போலீசார் ரஞ்சித் குமார், குமணன்தொழுவைச் சேர்ந்த தங்கத்தாய் விக்கிரமங்கலத்தை சேர்ந்த அமரன், வஞ்சிக்கொடி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.இதேபோல் தேனி அருகே சொக்கத்தேவன்பட்டியை சேர்ந்த பாண்டி என்பவரின் 17 வயது மகளுக்கும் வருஷநாட்டை சேர்ந்த தீனதயாளன் 29, என்பவருக்கும் ஜூலை 7ல் பசுமலைத்தேரி பெருமாள் கோயிலில் திருமணம் முடிந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த சமூக நல விரிவாக்க அலுவலர் மலர்கொடி புகாரில் ஆண்டிபட்டி அனைத்து மகளிர் போலீசார் வருஷநாட்டைச் சேர்ந்த தீன தயாளன், சித்ரா, சொக்கத்தேவன்பட்டியை சேர்ந்த பாண்டி, ரதி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்