உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / சேவை மையம் அருகே தொங்கும் மின் ஒயர்

சேவை மையம் அருகே தொங்கும் மின் ஒயர்

பெரியகுளம் : பெரியகுளம் வடகரை எஸ்பி.ஐ., வாடிக்கையாளர் சேவை மையம் அருகே அறுந்து தொங்கும் மின் ஒயரை சீரமைக்க மின்துறை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.பெரியகுளம் வடகரை பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே நகராட்சி வணிக வளாகத்தில் கீழ் தளத்தில் டி.எஸ்.பி., அலுவலகம், முதல் தளத்தில் எஸ்.பி.ஐ., வங்கி மற்றும் இதன் வாடிக்கையாளர் சேவை மையம் கீழ் தளத்தில் இடது புறம் உள்ளது. இங்கு சேமிப்பு கணக்கு துவங்குதல், ஆதார் கார்டு மூலம் பணம் பரிவர்த்தனைகள், பிரதம மந்திரி சமூக பாதுகாப்பு திட்டம் உள்ளிட்ட கீழ் பல்வேறு சேவை திட்டங்களில் விண்ணப்பிக்க தினமும் ஏராளமான வாடிக்கையாளர்கள் சேவை மையத்திற்கு வந்து செல்கின்றனர். சில தினங்களுக்கு முன்பு பெய்த மழையால் இங்குள்ள மின் ஒயர் அறுந்து விழுந்தது. நல்லவேளையாக யாரும் இல்லாததால் அசம்பாவிதம் ஏதும் இல்லை. இதனை சீரமைக்க வங்கி பணியாளர்கள் மின்துறை நிர்வாகத்திடம் தகவல் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. இதன் அருகே சென்றால் 'ஷாக்' அடிக்கிறது. எலக்டிரீசியன் தன்னார்வலர் கீழே கிடந்த ஒயரை கம்பத்தில் கட்டி வைத்துள்ளார். அசம்பாவிதம் ஏதும் நடப்பதற்குள் மின் ஒயரை சரி செய்வதற்கு மின்துறை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ