உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / சரியான நேரத்தில் வந்துள்ளேன் தினகரன் பேச்சு

சரியான நேரத்தில் வந்துள்ளேன் தினகரன் பேச்சு

எழுமலை, : தேனி தொகுதி பா.ஜ., கூட்டணியின் அ.ம.மு.க., வேட்பாளர் தினகரன் உசிலம்பட்டி, எழுமலை, பேரையூர் பகுதி கிராமங்களில் பிரசாரம் செய்தார். கோடாங்கிநாயக்கன்பட்டியில் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு பேசியதாவது:இப்பகுதியில் எம்.பி.,யாக இருந்துள்ளேன். மீண்டும் சரியான நேரத்தில் வேட்பாளராக வந்துள்ளேன்.அப்போது சேடபட்டி தொகுதியாக இருந்தது. தற்போது உசிலம்பட்டி தொகுதியில் உள்ளது. மோடி நம்மோடு கூட்டணியில் இருக்கிறார். தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி மூலம் தமிழ்நாட்டுக்கு தேவையான திட்டங்களை பெற்றுத்தர முடியும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ