உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கோடையில் கருகிய ஏலச்செடிகள் அகற்றி மறுநடவு ஆரம்பம்

கோடையில் கருகிய ஏலச்செடிகள் அகற்றி மறுநடவு ஆரம்பம்

கம்பம்: கோடை வெப்பத்தால் காய்ந்து போன ஏலச் செடிகள், கோடை மழையால் தலை சாய்ந்தன. செடிகளை அப்புறப்படுத்தும் பணிகளில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.இடுக்கி மாவட்டத்தில் 2 லட்சம் ஏக்கரில் ஏலக்காய் சாகுபடி செய்யப்படுகிறது. வண்டன் மேடு, மாலி, சாஸ்தா நடை, மேப்பாறை, புளியன் மலை, கணவா குழி, இஞ்சிப் பிடிப்பு, சங்குண்டான், சுல்தானியா, கல்தொட்டி, மாதவன் கானல், நெடுங்கண்டம், பூப்பாறை, அந்நியார் தொழு உள்ளிட்ட பல பகுதிகளில் ஏலக்காய் மட்டுமே பிரதானமாக சாகுபடியாகிறது.ஏலக்காய் சாகுபடிக்கு மிதமான மழை தொடர்ந்து கிடைக்க வேண்டும். மழை கூடுதலாக பெய்தாலும், குறைவாக பெய்தாலும் மகசூல் இழப்பு ஏற்படும்.. இந்த சீசனில் கடும் வெப்பம் கடந்த 3 மாதங்களாக நிலவியது. செடிகள் காய்ந்து கருகியது.இந்நிலையில் கடந்த 10 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. கோடை வெப்பத்தால் காய்ந்த செடிகள், கோடை மழையால் தலை சாய்ந்தன.சாய்ந்த ஏலச் செடிகளை அகற்றி நிலத்தில் மறுநடவு செய்வதற்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. தொழிலாளர்கள் அதற்கான பணிகளை செய்து வருகின்றனர். இதனால் மகசூல் இழப்பு ஒரு பக்கம் இருந்தாலும், மறு நடவு செய்ய ஆகும் செலவும் ஏல விவசாயிகளுக்கு சுமையாகும். மேலும் மறு நடவு செய்த செடிகள் விளைச்சலுக்கு வர 3 ஆண்டுகள் வரை ஆகும் என்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி