உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கம்பம், உத்தமபாளையம், சின்னமனுாரில் வயிற்றுப்போக்கு பாதிப்பு அதிகரிப்பு

கம்பம், உத்தமபாளையம், சின்னமனுாரில் வயிற்றுப்போக்கு பாதிப்பு அதிகரிப்பு

கம்பம், : கம்பம், சின்னமனுார், உத்தமபாளையம் வட்டாரங்களில் கிராமங்கள், நகரங்கள் என அனைத்து ஊர்களிலும் வயிற்றுப் போக்கு ஏற்பட்டுள்ளது. இதனை தடுக்க ஆரம்ப சுகாதார நிலையங்கள் முழு வீச்சில் செயல்பட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.கடந்த சில வாரங்களாக மழை, அதிகபடியான வெயில் என சீதோஷண நிலை மாறி, மாறி நிலவி வருகிறது. தற்போது தொடர்ந்து மேகமூட்டத்துடன் சாரல் பெய்து வருகிறது. இதனால் முல்லைப் பெரியாற்றில் மழை வெள்ள நீரும், ஆற்றில் கலந்து தண்ணீர் கலங்கலாக வருகிறது.சீதோஷ்ண நிலை மாற்றம், ஆற்றில் வரும் மழை வெள்ள நீரை அப்படியே குடிநீராக பருகுவது போன்ற காரணங்களால் வயிற்றுப் போக்கு ஏற்படுகிறது. கம்பம், சுருளிப்பட்டி, காமயகவுண்டன்பட்டி, நாராயணத்தேவன்பட்டி, சின்னமனுார், அம்மாபட்டி, கோம்பை, பல்லவராயன்பட்டி, கன்னிசேர்வைபட்டி, காமாட்சிபுரம், ஓடைப்பட்டி பகுதிகளிலும் வயிற்றுப் போக்கால் பாதிக்கப்பட்டவர்கள் ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளுக்கு வரத் துவங்கி உள்ளனர்.ஏற்கனவே படுக்கைகளில் நோயாளிகள் இருப்பதால், கம்பம் அரசு மருத்துவமனையில் வயிற்றுப் போக்கு பாதித்தவர்களை கீழே தரையில் படுக்க வைப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இப்பாதிப்பு தொடர்வதால் வட்டார ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர்கள், இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேற்பார்வையாளர்கள், கிராம செவிலியர்களை கிராமங்களில் கண்காணிக்க அறிவுறுத்த வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ