உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / இடுக்கியில் ஆன்லைன் மோசடி அதிகரிப்பு 55 வழக்குகளில் ரூ.5.54 கோடி இழப்பு

இடுக்கியில் ஆன்லைன் மோசடி அதிகரிப்பு 55 வழக்குகளில் ரூ.5.54 கோடி இழப்பு

மூணாறு: இடுக்கி மாவட்டத்தில் 'ஆன்லைன்' மோசடியில் சிக்கிய பலர் ரூ.5.5 கோடியை இழந்ததாக எஸ்.பி. விஷ்ணுபிரதீப் தெரிவித்தார்.அவர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: இடுக்கி மாவட்டத்தில் கடந்த ஆண்டுகளை ஒப்பிடுகையில், இந்தாண்டு ' ஆன் லைன்' மோசடி வழக்குகள் எண்ணிக்கையும், பண இழப்பும் அதிகரித்தன. கடந்தாண்டு 52 வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், இந்தாண்டு நேற்று முன்தினம் வரை 55 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அதன் மூலம் ரூ.5,54,64,779 இழப்பு ஏற்பட்டது.'வாட்ஸ் அப்' , இ-மெயில் உள்பட சமூக வலைதலங்களில் வெளிவரும் கவர்ச்சிகரமான இணைப்புகளை ' கிளிக்' செய்வதன் மூலம் ஆபத்தான பயன்பாடுகள் அலைபேசிகளில் நிறுவப்படுகின்றன. அதன் மூலம் நமது தகவல்கள் அனைத்தும் கசிந்து பணத்தை இழக்க நேரிடுவதால் பொதுமக்கள் விழிப்புடன் செயல்பட வேண்டும்.' ஆன் லைன்' வர்த்தகம் போன்றவை ஆரம்பத்தில் லாபகரமாக இருக்கும். பெரும் தொகையை முதலீடு செய்ததும் தளம், பயன்பாடு ஆகியவை காணாமல் போகும். அது வரை தொடர்பு கொண்ட அலை பேசி எண்களும் துண்டிக்கப்படும். இது ஒரு வகை மோசடி என்றால் கூரியர் மூலம் அனுப்பிய போதை பொருள் சிக்கியதாகவும், அது தொடர்பாக நடவடிக்கை எடுக்காமல் இருக்க பெரும் தொகையை கொடுக்க வேண்டும் என போலீஸ் உடையில் வீடியோ கால் மூலம் பேசி மோசடி நடக்கிறது. இந்த பாணியில் ஏமாற்றப்பட்ட தொடுபுழாவைச் சேர்ந்த பெண் ஒருவர் பெரும் தொகையை இழந்தார். அது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். ஆன்லைன் மோசடி தொடர்பாக 1930 என்ற எண்ணில் ஒரு மணி நேரத்திற்குள் (கோல்டன் ஹவர் ) புகார் அளித்தால் இழந்த தொகையை மீட்க வாய்ப்புள்ளது, என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை