சுதந்திர தின விழா கொண்டாட்டம்
தேனி : மாவட்டத்தில் நேற்று முன்தினம் நடந்த சுதந்திர தின விழா அனைத்து நிறுவனங்களிலும் தேசிய கொடி ஏற்றப்பட்டு, விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.தேனி தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் ராணி கொடி ஏற்றினார். தலைமையிடத்து துணை தாசில்தார் மாரிமுத்து, மண்டல துணை தாசில்தார் ராஜாராம், வி.ஏ.ஓ., ஜீவா, பங்கேற்றனர்.தேனி கோட்ட தலைமை தபால் நிலையத்தில் மேற்பார்வை கண்காணிப்பாளர் குமரன் கொடி ஏற்றினார்.தேனி மாவட்ட தீயணைப்புத்துறை அலுவலகத்தில் மாவட்ட தீயணைப்புத்துறை அலுவலர் சந்திரகுமார் கொடி ஏற்றினார். உதவி மாவட்ட தீயணைப்புத்துறை அலுவலர் குமரேசன், நிலைய அலுவலர்கள், கண்காணிப்பாளர்கள் பங்கேற்றனர்.தேனி தீயணைப்புத்துறை நிலையத்தில் மாவட்ட தீயணபை்புத்துறை அலுவலர் சந்திரக்குமார் கொடி ஏற்றினார். நிலைய அலுவலர் ஜெயராணி முன்னிலை வகித்தார். அல்லிநகரம் ஸ்டேஷனில் எஸ்.ஐ., கண்ணன் கொடி ஏற்றினார். எழுத்தர் முருகன், சிறப்பு எஸ்.ஐ.,க்கள், போலீசார் பங்கேற்றனர்.பழனிசெட்டிபட்டி போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் சிவராமகிருஷ்ணன் கொடி ஏற்றினார். எழுத்தர் சவுந்திரபாண்டியன், எஸ்.ஐ.,க்கள் இத்ரிஸ்கான், மணிமாறன், சிறப்பு எஸ்.ஐ.,க்கள் போலீசார் பங்கேற்றனர்.வீரபாண்டி போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.ஐ., அசோக் கொடி ஏற்றினார். எழுத்தர்கள் மாரிமுத்து, செல்வி முன்னிலை வகித்தனர். சிறப்பு எஸ்.ஐ.,க்கள், ஏட்டுகள் பங்கேற்றனர்.வீரபாண்டி பேரூராட்சி அலுவலக வளாகத்தில் தலைவர் கீதா கொடி ஏற்றினார். செயல் அலுவலர் கணேசன், கிளர்க் சரவணன், ஊழியர்கள் பங்கேற்றனர்.வீரபாண்டி கவுமாரியம்மன் கோயிலில் செயல் அலுவலர் மாரிமுத்து கொடி ஏற்றினார். மேலாளர் பாலசுப்பிரமணியன், கோயில் ஊழியர்கள் பங்கேற்றனர்.ஆண்டிபட்டி அன்னை டோரா நர்சிங் கல்லுாரியில் கல்லுாரிச் செயலர் லட்சுமணன் கொடி ஏற்றினார். முதல்வர் சுதாமகேஸ்வரி பேசினார். மாணவிகள் கலைகள் நிகழ்ச்சிகள் நடத்தினர். லட்சுமிபுரம் கால்நடைத்துறை இணை இயக்குனர் அலுவலகத்தில் இணை இயக்குனர் கோயில்ராஜா கொடி ஏற்றினார். அலுவலர்கள், கால்நடைத்துறை டாக்டர்கள், உதவி இயக்குனர்கள், ஊழியர்கள் பங்கேற்றனர். இனிப்புகள் வழங்கப்பட்டன.பெரியகுளம்: ஸ்ரீ வல்லி வரதராஜ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடிகர் மோகன்ராமன்கொடியேற்றினார். பள்ளி ஆலோசகர் கிருஷ்ணசாமி, பள்ளி தாளாளர் மோகன் குமார், பள்ளி முதல்வர் ராஜேந்திர பிரசாத்,ராஜ் ஸ்ரீ சர்க்கரை ஆலை நிர்வாக உறுப்பினர்கள் பங்கேற்றனர்.பெரியகுளம் ஜெயராஜ் அன்னபாக்கியம் மகளிர் கல்லூரியில் தமிழ் இலக்கியமன்ற பொருளாளர் தாமோதரன் கொடியேற்றினார். கல்லூரி முதல்வர் சேசுராணி, செயலர் சாந்தாமேரி ஜோஷி, மாணவிகள் பேரவை தலைவர் மிஸ்பாசகாயராணி பங்கேற்றனர். மாணவிகள் கலை நிகழ்ச்சி நடந்தது. சரஸ்வதி நடுநிலைப் பள்ளியில் கவுன்சிலர்சரவணக்குமார் கொடியேற்றினார்.பள்ளி செயலர் ராஜா, தலைமையாசிரியர் ரவிக்குமார், ஆசிரியர் செந்தில்குமார், ஆசிரியைகள் மகேஸ்வரி, ராதா பங்கேற்றனர்.சேக்கிழார் நடுநிலைப்பள்ளியில் தலைமையாசிரியர் விஜயகுமார் கொடியேற்றினார். நிர்வாகி தாமோதரன் பங்கேற்றனர்.பெரியகுளம் அரசு போக்குவரத்து கழகத்தில் கிளை மேலாளர் மணிவண்ணன் கொடியேற்றினார். கண்டக்டர்கள், டிரைவர்கள் பங்கேற்றனர்.