உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ஆட்டோ ஸ்டாண்டிற்கு இடம் ஒதுக்க வலியுறுத்தல்

ஆட்டோ ஸ்டாண்டிற்கு இடம் ஒதுக்க வலியுறுத்தல்

ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி வைகை ரோடு எம்.ஜி.ஆர்., சிலை அருகே ஆட்டோ ஸ்டாண்டிற்கு இடம் ஒதுக்கி தர வைகை ஆட்டோ ஓட்டுனர் சங்கம் சார்பில் பேரூராட்சி அலுவலகத்தில் கோரிக்கை வைத்தனர்.ஆண்டிபட்டி எம்.ஜி.ஆர்., சிலை அருகே வைகை அணை செல்லும் ரோடு சமீபத்தில் விரிவாக்கம் செய்யப்பட்டு இருவழிப்பாதையாக அகலப்படுத்தப்பட்டது. விரிவாக்கம் செய்த இடங்களில் சிலர் தற்காலிக கடைகளை அமைத்தும் சைக்கிள், தள்ளு வண்டிகளில் வியாபாரம் செய்வதால் பொது மக்களுக்கும் போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படுவதாக பலர் புகார் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து பேரூராட்சி நிர்வாகம், போலீசார் மற்றும் நெடுஞ்சாலை துறையினர் அப்பகுதியில் இருந்த ரோட்டோர கடைகளை அப்புறப்படுத்தினர். அப்பகுதியில் இருந்த ஆட்டோ ஸ்டாண்டையும் வேறு இடத்திற்கு மாற்ற உத்தரவிட்டனர்.ஆட்டோ ஸ்டாண்டை மாற்றுவதால் தங்களின் வாழ்வாதாரம் பாதிப்பதாக கூறி வைகை ஆட்டோ சங்கம் சார்பில் ஆட்டோ டிரைவர்கள், உரிமையாளர்கள் அப்பகுதியில் ஆட்டோ ஸ்டாண்ட் தொடர்ந்து செயல்பட அனுமதிக்குமாறு பேரூராட்சி அலுவலகத்தில் கோரிக்கை வைத்தனர். ஹிந்து முன்னணி மாவட்ட செயலாளர் செல்வம், பேரூராட்சி வார்டு கவுன்சிலர்கள் கலாவதி, ராமசாமி மற்றும் பேரூராட்சி அலுவலர்கள் இதுகுறித்து அதிகாரிகளுடன் கலந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்த பின் அங்கிருந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை