உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தேர்தல் பணி செய்த அலுவலர்கள் வங்கி பாஸ் புக், பே சிலிப் வழங்க அறிவுறுத்தல்

தேர்தல் பணி செய்த அலுவலர்கள் வங்கி பாஸ் புக், பே சிலிப் வழங்க அறிவுறுத்தல்

கம்பம் : நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் பணியாற்றிய அலுவலர்களிடம் வங்கி பாஸ் புக், பே சிலிப் ( சம்பள பட்டியல் ) வழங்கும் படி, சம்பந்தப்பட்ட உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கேட்டுள்ளனர்.லோக்சபா தேர்தல் கடந்த ஏப்.19 ல் நடந்தது. மார்ச் முதல் வாரமே ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கும் மூன்று பறக்கும் படை, இரண்டு நிலைக் கண்காணிப்பு குழு, இரண்டு வீடியோ குழு, இரண்டு செலவினங்களை கண்காணிக்கும் குழு நியமிக்கப்பட்டனர். இந்த குழுக்களின் பணி ஏப். 20 ல் நிறைவடைந்தது. பறக்கும் படை மட்டும் கேரள தேர்தல் காரணமாக கூடுதலாக 10 நாட்கள் பணி செய்தனர். இவர்கள் தவிர தேர்தல் நாளன்று தேர்தல் பணியில் ஈடுபட்டவர்கள் உள்ளனர்.இவர்கள் அனைவருக்கும், பணி காலத்திற்கு உரிய பணிக்கொடை வழங்கும் பணி துவங்கி உள்ளது. ஒவ்வொருவரும் தங்களின் வங்கி பாஸ் புக், 'பே சிலிப்' விபரங்களை தருமாறு உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கேட்டுள்ளனர். அடிப்படை சம்பளத்தை வைத்தே தேர்தல் பணிக்கான சம்பளம் தீர்மானிக்கப்படுகிறது. விரைவில் தேர்தல் பணி செய்த அலுவலர்களுக்கு அவர்களின் வங்கி கணக்குகளில் தேர்தல் பணியாற்றியதற்கு உரிய ஊதியம் வரவு வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ