உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ரோட்டில் பார்க்கிங் செய்வதை தடுக்க இரும்பு தடுப்பு அமைப்பு

ரோட்டில் பார்க்கிங் செய்வதை தடுக்க இரும்பு தடுப்பு அமைப்பு

தேனி, : தேனி பாரஸ்ட் ரோட்டில் இடையூறாக வாகனங்கள் நிறுத்துவதை தடுக்க போக்குவரத்து போலீசார் ரோட்டோரங்களில் இரும்பு தடுப்புகள் வைத்துள்ளனர்.தேனி பாரஸ்ட்ரோட்டில் மேற்கு பகுதியில் வரிசையாக கார், ஆட்டோக்களை போக்குவரத்திற்கு இடையூராக நிறுத்தி வந்தனர். நேற்று காலை கலெக்டர் ஷஜீவனா அப்பகுதியில் ஆய்வு செய்தார். இதைத்தொடர்ந்து ரோட்டின் மேற்கு ஓரத்தில் போக்குவரத்து போலீசார் இரும்பு தடுப்புகளை வைத்துள்ளனர்.ஆனால் எதிர் புறம் சில கடைகாரர்கள் இடையூறாக விளம்பர பதாகைகள் வைப்பது தொடர்கிறது.இதனையும் அகற்ற வேண்டும். ரயில் செல்லும் போது பள்ளி துவங்கும், முடியும் நேரத்தில் போக்குவரத்தை ஒழுங்கு படுத்த போலீசார் பணியில் ஈடுபட கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை