உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தேர்தல் பயணப்படி கிடைக்காமல் போலீசார் பரிதவிப்பு

தேர்தல் பயணப்படி கிடைக்காமல் போலீசார் பரிதவிப்பு

தேனி: தமிழகத்தில் லோக்சபா தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசாருக்கு பயணப்படி வழங்காததால் பரிதவித்து வருகின்றனர்.தேர்தல் காலத்தில் பிரமுகர்களுக்கான பாதுகாப்பு, பொது கூட்ட பாதுகாப்பு, ஓட்டுப்பதிவு நாள் பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபடுத்தப்பட்டனர். தேர்தல் அறிவிக்கப்பட்ட மார்ச் 16 முதல் நடத்தை விதிகள் விலக்கிக்கொள்ளப்பட்ட ஜூன் 6 வரை 81 நாட்கள் போலீசார் பல்வேறு இடங்களில் பணி அமர்த்தப்பட்டனர். ஆயுதப்படை போலீசார், தமிழ்நாடு சிறப்பு காவல்படையினர், ஊர்க்காவல் படையினர், உயரதிகாரிகள் என பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட ஒவ்வொருவருக்கும் ரூ.17 ஆயிரம் முதல் பல ஆயிரம் வரை பயணப்படி இன்னமும் வழங்கப்படவில்லை. தேர்தல் ஆணையம் விரைவில் போலீசார் பயணப்படி தொகை வழங்க உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை