உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மோட்டார் வாகன ஆய்வாளரை தாக்கிய ஜீப் டிரைவர் கைது

மோட்டார் வாகன ஆய்வாளரை தாக்கிய ஜீப் டிரைவர் கைது

மூணாறு,: மூணாறில் மோட்டார் வாகன ஆய்வாளரை தாக்கிய ஜீப் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.தேவிகுளம் மோட்டார் வாகன ஆய்வாளர் சந்திரலால் நேற்று முன்தினம் மூணாறு நகரில் வாகனங்களை சோதனையிட்டுக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியில் சைலன்ட்வாலி எஸ்டேட்டைச் சேர்ந்த சுரேஷ்குமார் 33, ஓட்டி வந்த ஜீப்பை நிறுத்தி ஆவணங்களை பரிசோதித்தபோது வாகனத்திற்கு தகுதி சான்று இல்லை என தெரியவந்தது. ஏற்கனவே இதே பிரச்னையில் மூன்று முறை எச்சரிக்கப்பட்டதால், இந்த முறை நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் கூறியதால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது மோட்டார் வாகன ஆய்வாளர் சந்திரலாலை தாக்கி விட்டு ஜீப்புடன் சுரேஷ்குமார் கடந்து விட்டார். அவரை, மூணாறு இன்ஸ்பெக்டர் ராஜன் கே. அரண்மனா தலைமையில் போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை