| ADDED : ஜூன் 06, 2024 05:08 AM
கம்பம் : கம்பம் ஆர்.ஆர். இன்டர்நேஷனல் பள்ளியில் சி.பி. எஸ். இ. பிளஸ் 2 பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.சி.பி.எஸ்.இ., - பிளஸ் 2 பொதுத் தேர்வில் கம்பம் ஆர்.ஆர். இன்டர்நேஷனல் பள்ளி மாணவ மாணவிகள் அதிக மதிப்பெண் பெற்று சாதனை படைத்தனர் . இப்பள்ளி மாணவர் ஸ்ரீநகுலன் 96 சதவீதம் எடுத்து முதலிடத்தையும், தனுஷ் 94.6. சதவீதம் எடுத்து இரண்டாமிடத்தையும், சாம அஞ்சும் 93.8 சதவீதம் எடுத்து மூன்றாம் இடம் பெற்றனர்.10 ம் வகுப்பு பொதுத் - தேர்வில் ஹெர்தியா 96.2. சதவீதம், பிரித்திகா 93.8 சதவீதம தேவ காளி தீக்சிதா , ஸ்ரீ ஹரா ஆகிய இருவர் 93.4 சதவீதம் எடுத்து முதல் மூன்று இடங்களை பெற்றனர். இம்மாக் ஜென் பூர்ணா உயிரியியல் பாடத்திலும் , பிரித்திகா , ஸ்ரீ சஞ்சுகி மது ஆகியோர் தமிழ் பாடத்தில் சென்டம் மதிப்பெண் பெற்றனர்.சாதனை மாணவர்களை பள்ளியின் நிர்வாக குழு தலைவர் ஆர்.ராஜாங்கம், துணைத் தலைவர் ஆர்.அசோக் குமார், செயல் தலைவர் ஆர்.ஜெகதிஷ், இயக்குநர்கள் விமல் கண்ணன், கீர்த்திகா, முதல்வர் ஆனந்த வள்ளி ஆகியோர் பாராட்டி பரிசுகள் வழங்கினார்கள்.