உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ஆக்கிரமிப்புக்கு உடந்தையான அதிகாரிகள் மீதான விசாரணை சி.பி.ஐ.விசாரிக்க கேரள உயர் நீதிமன்றம் கருத்து கேட்பு

ஆக்கிரமிப்புக்கு உடந்தையான அதிகாரிகள் மீதான விசாரணை சி.பி.ஐ.விசாரிக்க கேரள உயர் நீதிமன்றம் கருத்து கேட்பு

மூணாறு: மூணாறில் ஆக்கிரமிப்புக்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் மீதான விசாரணையை சி.பி.ஐ.,யிடம் ஒப்படைப்பதற்கு கருத்து தெரிவிக்குமாறு அரசுக்கு கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.மூணாறில் ஆக்கிரமிப்பு தொடர்பாக திருச்சூரைச் சேர்ந்த ' ஒன் எர்த் ஒன் லைப்' எனும் அமைப்பு கேரள உயர்நீதி மன்றத்தில் தொடர்ந்த வழக்கை நீதிபதிகள் முகம்மதுமுஸ்தாக், ஷோபா அன்னம்மாஈப்பன் ஆகியோர் கொண்ட அமர்வு விசாரிக்கின்றனர்.அந்த வழக்கு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. மூணாறு உள்பட பல பகுதிகளில் சட்டவிரோதமான ஆக்கிரமிப்புகளுக்கு வருவாய்துறை அதிகாரிகள் 19 பேர் உடந்தையாக இருந்தனர் என இன்டலிஜென்ட் பிரிவு முன்னாள் ஏ.டி.ஜி.பி., ராஜன்மதேக்கர் அறிக்கையில் கூறியிருந்தார். அவர்கள் மீதான விசாரணையை சி.பி.ஐ.யிடம் ஒப்படைப்பதற்கு அரசு கருத்து தெரிவிக்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கைகள் எதுவும் எடுக்கவில்லை என்பதை உறுதி செய்த நீதிபதிகள் அது குறித்து அட்வகேட் ஜெனரலிடம் விளக்கம் கேட்டனர். ஐ.ஏ.எஸ். அதிகாரியை விசாரணை சிறப்பு அதிகாரியாக நியமிக்கலாமா என்பது குறித்தும் பரிசீலிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை